Saturday, May 26, 2012

உலகநாடுகளின் பணத்தில் உங்கள் புகைப்படம் இருக்க..

உலகநாடுகளின் பணத்தில் உங்கள் புகைப்படம் இருக்க..
நண்பருக்கு பிறந்தநாள் என்றால் எதாவது பரிசு கொடுப்போம்
ஆனால் அவர் வேறு எந்த நாட்டில் ஆவது இருந்தால் என்ன
செய்வோம் இமெயில் மூலம் எதாவது வாழ்த்து அட்டை
அனுப்புவோம். நம் நண்பர் எந்த நாட்டில் இருக்கிறாறோ அந்த
நாட்டின் பணத்தில் அவர் உருவம் பதித்து அனுப்பினால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.ஆனால் எனக்கு போட்டோ எடிட் செய்யும் எந்த
மென்பொருளும் தெரியாது என்கிறீர்களா ? , அல்லது தெரியும்
ஆனாலும் நேரம் இல்லை என்கிறீர்களா ?  5 நிமிடம் போதும்.
உங்களுக்காகவே ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.festisite.com/money/
இதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
எந்த நாட்டின் பணத்தில் உங்கள் நண்பரின் புகைப்படம் சேர்க்க
வேண்டுமோ அந்த பணத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து உங்கள் நண்பரின் புகைப்படத்தை தேர்வு செய்து அப்லோட்
செய்யவும்.ஒரு சில நிமிடங்களில் தேர்வு செய்த பணத்தில் உங்கள்
நண்பரின் புகைப்படம் வந்துவிடும். வலது , இடது , மேல், கீழ் என்று
அம்புக்குறியை அழுத்தி புகைப்படத்தை சரிசெய்து கொள்ளவும்.
+ என்ற பட்டன் மூலம் படத்தை பெரியதாக்கலாம்.  -  என்ற பட்டன்
மூலம் படத்தை சிறியதாக்கலாம். எல்லாம் சரி செய்யபட்டவுடன்
” Finalize image “ என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் பகக்த்தில் படத்தின் மேல் “Right clik”
செய்து “Save Image” என்பதன் மூலம் சேமித்துக்கொள்ளவும்.
பின் உங்கள் நண்பருக்கு அனுப்புங்கள்.
உதாரணமாக நாம் நம் தேசதந்தை காந்திஜி-யின் படத்தை
அமெரிக்காவின் ஒன் மில்லியன் டாலர் நோட்டில் சேர்த்துள்ளோம்.
பொருத்தமாகவே உள்ளது. இதே போல் உங்கள் புகைப்படம்
அல்லது உங்கள் நண்பரின் புகைப்படத்தையும் வைத்து உருவாக்கலாம்.

Friday, May 25, 2012

நீயோ இன்னும் மனமிரங்காமல்...


உன்னை கண்ட நாள் முதல் ஒரு நாளைக்கு மும்முறை என்று முறை வைத்து சுற்றியிருக்கிறேன் உன் வீடு இருக்கும் வீதியை
இதையே கோவிலில் இறைவனை நினைத்து சுற்றியிருந்தால்
என் பக்தியை மெச்சி வரம் அழித்து இருப்பான் இறைவன்.  ஆனால்
நீயோ இன்னும் மனமிரங்காமல்...?

Thursday, May 24, 2012

நம் தளத்திற்கு SEO மார்க் என்ன என்பதை உடனடியாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கலாம்.


நம் தளத்திற்கு SEO மார்க் என்ன என்பதை உடனடியாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கலாம்.




ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் அல்லது பலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு நம் தளத்திற்கு உருவாக்கும் SEO என்று சொல்லக்கூட Search Engine Optimization  சிறப்பாக செயல்படுகிறதா என்பதை உங்கள் இணையதளத்தின் SEO  மதிப்பை வைத்து ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு உதவியாக ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆன்லைன் மூலம் நாம் பல தளங்களை பார்க்கிறோம் SEO -ல் நாங்கள் கெட்டிக்காரர்கள் என்று சொல்லும் அனைத்து தளங்களையும் நாம் ஆன்லைன் மூலம் SEO Explorer மூலம்  சோதித்துப்பார்க்கலாம்  நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.


இணையதள முகவரி : http://www.seopageexplorer.com
இத்தளத்திற்கு சென்று Enter Url என்று கொடுத்திருக்கும் கட்டத்திற்குள் எந்த வலைப்பூவை சோதித்துப்பார்க்க வேண்டுமோ அதன் தள முகவரியை கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு Overview என்ற Tab-ல் நம் தளத்தின் ஸ்கோர் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.Title and Meta மற்றும் Kewords என்னவெல்லாம் கொடுத்திருக்கிறோம் என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாம். எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை.துல்லியமான SEO முடிவுகளை  உடனுக்கூடன் தெரிந்து கொள்ளலாம். புதுமை விரும்பிகளுக்கும் SEO பயன்படுத்துபவர்களுக்கும்  இத்தளம் பயனுள்ளதாகவும் தங்கள் தளத்தின் SEO எப்படி மேம்படுத்தலாம் என்பதைப்பற்றியும் ஐடியா கிடைத்திருக்கும்.

புதுமையாக எந்த நாட்டு நேரத்தையும் ஒரே நொடியில் பார்க்கலாம்.


புதுமையாக எந்த நாட்டு நேரத்தையும் ஒரே நொடியில் பார்க்கலாம்.


உலகநாடுகளின் நேரத்தை நாம் எந்த நாட்டில் இருந்தும் ஒரே நொடியில்
பார்க்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
உலகநாடுகளில் நாம் பார்க்க விரும்பும் நாட்டின் நேரத்தையும் நாம்
இருக்கும் நாட்டின் நேரத்தையும் உடனுக்குடன் எளிதாக தெரிந்து
கொள்ளலாம். உலக நாடுகளின் நேரத்தை கணக்கிட பல இணைய
தளங்கள் இருந்தாலும் அத்தனையும் விட எளிதாகவும்
புதுமையாகவும் நமக்கு உலகநாடுகளின் நேரத்தை பார்க்க ஒரு
தளம் உள்ளது.
இணையதள முகவரி :  http://www.timezonecheck.com
இந்ததளத்திற்கு சென்றால் மேப் வடிவமைப்பில் நமக்கு அனைத்து
நாடுகளும் அதனுடன் நேரமும் தெரிகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும்
தகுந்தாற் போல் ஒவ்வொரு நாட்டில் நேரமும் துல்லியமாக மாறிக்
கொண்டுவருகிறது.நாம் எந்த நாட்டில் இருந்து பார்க்கிறோமோ
அந்த நாட்டின் நேரம் My Time என்ற பெயரில் முதலில் தெரிகிறது.
இதைத்தவிர முக்கியமான நகரத்தின் பெயரை இணையதளத்தின் கீழ்
இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம்.இந்தத்தளத்தின் மூலம்
உலகில் இருக்கும் எந்த நாட்டின் நேரத்தையும் துல்லியமாக எளிதாக
கண்டுபிடிக்கலாம்.

Tuesday, May 22, 2012

என் நட்பு.

நீ போ என்றாலும் உன் நிழல் உன்னை விட்டு போகாது
அது போலத்தான் என் நட்பும் ஆனால் நிழல் அல்ல நிஜம்.

Saturday, May 19, 2012

Love vs Friendship

காதல் என்பது கை சேரும் வரை நட்பு என்பது உயிர் போகும் வரை...

Friday, May 18, 2012

என் உயிர்த்தோழிக்கு.....

அமைதி வலித்ததில்லை நீ என்னுடன்
பேசாமல் இருந்த வரை..
தனிமை சுட்டதில்லை உன்
மௌனத்தை நான் காணும் வரை..
வாழ்க்கை வாழப் பிடிக்காமல்
போனதில்லை நீ என்னை பிரிந்த நாளில்
நான் வாழ்ந்த வரை..
இப்படி என் வாழ்வில் நான் பார்த்திராத
அத்தனையும் உன்னால் தான் கண்டேன்
தோழி...!!!!!
        S.Bala