நம் புகைப்படத்துன் ஹாலிவுட் மூவி போஸ்டர் எளிதாக ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆங்கிலப்படத்துக்காக உருவாக்கப்படும் மூவி போஸ்டரில் நம் புகைப்படம் வரும்படி செய்யலாம் இந்த வேடிகையான வேலை செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.istarin.com
இத்தளத்திற்கு சென்று பலவகையான ஹாலிவுட் திரைப்படங்களின் போஸ்டரில் எந்த போஸ்டரில் நம் புகைப்படம் வைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து வரும் திரையில் Upload என்ற பொத்தானை சொடுக்கி நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து பதிவேற்றவும் அடுத்து வரும் திரையில் நம் புகைப்படத்தின் முகம் குறிப்பிட்ட போஸ்டரில் உள்ள நபரின் முகத்துக்கு பதிலாக வைக்கப்பட்டிருக்கும். இந்த புகைப்படத்தை அப்படியே பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் உள்ள நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு வேளை நம் முகம் சரியாக வராவிட்டால் Adjust face என்பதை சொடுக்கி நாம் மாற்றம் செய்யலாம். உதாரணமாக நடிகர் சூர்யாவின் புகைப்படத்தை ஹரிபாட்டர் போஸ்டரில் வைத்து கிடைக்கும் படம் தான் படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்தில் தான் நாம் நடிக்கவில்லை நம் புகைப்படமாவது இருக்கட்டுமே என்று எண்ணும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நன்றாக இருக்கிறது...
ReplyDeleteதொடருங்கள் எழுத்துப் பதிவுகளை..
This comment has been removed by the author.
ReplyDelete