நம் கம்யூட்டரில் இன்றியமையாத சில மென்பொருள்கள்
தேவை. அப்படிபட்ட மென்பொருள்களை தரவிரக்கும் போது
கூடவே வைரஸும் வருகிறது.இதை தவிர்க்க அந்தந்த
மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து
தரவிரக்கலாம்.இப்படி ஒவ்வொரு மென்பொருளும் ஒவ்வொரு
இணையத்திலிருந்து தரவிரக்குவதற்கு பதிலாக அத்தனையும்
ஒரே இணையதளத்திலிருந்து தரவிரக்கலாம்
இணையதள முகவரி http://www.filehippo.com
எந்த வைரஸும் இல்லாமல் அதுமட்டுமின்றி நீங்கள் தரவிரக்கும்
மென்பொருளின் முதலில் வெளியான தொகுப்பிலிருந்து இன்று
வரை வெளியாகியுள்ள அனைத்தையும் பார்க்க மட்டும் இல்லாமல்
தரவிரக்கியும்கொள்ளலாம். அது மட்டுமா ஒவ்வொரு தொகுப்பிற்கும்
அதைப்பற்றிய முழுமையான செய்திகளுடன் என்ன மாறுதல்
செய்துள்ளனர் என்பதையும் தெரிவிக்கிறது.
நமக்கு மென்பொருள் பெயர் தெரியவில்லை என்றாலும் அவர்களே
தனித்தனியாக பகுதிவாரியாக பிரித்து வைத்துள்ளனர்.
பாட்டு கேட்பதற்கு உள்ள மென்பொருள் வகையை தேர்ந்தெடுத்தால்
அதிலுள்ள டாப் மென்பொருள்கள் தெரியவரும் உடனடியாக
தரவிரக்கிகொள்ளலாம்.
இதை எல்லாம் விட சிறப்பு எந்த தரவிரக்கப் போகும் மென்பொருளின்
(Screenshot) ஸ்கீரின்சாட்டும் பார்த்துக்கொள்ளலாம்.
அனைத்து கம்யூட்டரின் ஆடியோ வீடியோ டிரைவர் மென்பொருளும்
தரவிரக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நீர்யானையின்
பெருமையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு பதிவு போதாது.
வாழ்த்துக்கள் பாலா நல்லா இருக்கு
ReplyDeletethank you very much......
ReplyDelete