Thursday, November 29, 2012

கணனியின் வேகத்திற்கு தடையாக காணப்படும் அநாவசியமான கோப்புக்களை நீக்குவதற்கு.

கணனியின் வேகத்திற்கு தடையாக காணப்படும் அநாவசியமான கோப்புக்களை நீக்குவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.இருந்த போதிலும் CCleaner சில மேலதிக வசதிகளைக் கொண்டிருப்பதுடன் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


தற்போது CCleanerஆனது பயனர்களின் நன்மை கருதி தனது புதிய பதிப்பான CCleaner v3.23 வெளியிடப்பட்டுள்ளது.
இதனை Windows 8 இயங்குதளத்திலும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதுடன் Google Chrome மற்றும் Firefox உலாவிகளுக்கு சிறந்த ஒத்திசைவையும் கொண்டுள்ளது.
மேலும் இலகுவான பயனர் இடைமுகத்துடன் வெளியிடப்பட்டுள்ள இப்பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தரவிறக்கச் சுட்டி - தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment