Thursday, March 13, 2014

கூகிள் குசும்புகள்.

இப்போதெல்லம் இணையம் என்றாலே கூகிள்தான்.!  அந்தள்விற்கு எமக்கு தேவையான தகவல்களை தேடிப்பெற உறுதுணையாக உள்ளது அதனால்த்தான்  இண்டேர்நெட்டின் நுழைவாயில்...இணையத்தில் தேடல்  (Serch) என்பதையே கூகிள் செய்வது என்று வழக்கில் வந்துவிட்டது...
”மின்நகல்” எடுப்பது ஸெராக்ஸ் எடுப்பது ஆனாபோல் ..
this is the Phenomemnon of the Brand name Becoming generic.

இவ்வாறான கூகிளில் தேடுபொறியில் எமக்குத்தெரியாத சில வேடிக்கையான அம்சங்களும் உள்ளன வாருங்கள் தெரிந்து கொள்வோம்.


 *  what is the answer to Life, the Universe, and everything என்னும் சொற்தொடரை கூகிளில் தேடுங்கள் விடை 42 எனக்காட்டும் சம்மந்தமில்லாமல்



*   Zerg rush என்னும் சொற்தொடரை கூகிளில் தேடுங்கள்.  வைரஸ் உங்கள் தேடலை தின்று விடும். சேர்ச் கொடுத்திட்டு கொஞ்சம் வெயிட் பணணனுமுங்க..  
                                      

*சரி இப்போது  Do a barrel roll  என்னும் சொற்தொடரை கூகிளில் தேடுங்கள்.
என்ன ஆகிறது  உங்கள் பிரவுசர் ஒருமுறை குத்துக்கரணம் அடிக்கிறதா...ஹ்ம்.



 * இப்போது  Tilt அலலது askew என்னும் சொற்தொடரை கூகிளில் தேடுங்கள் உங்கள் பிரவுசர் சற்றே வலப்புறம்  நானிக்கோனி நிற்கிறதா....???

*  Epic Google  - இதைக்கிளிக் செய்யுங்கள்  எவ்வளவு நேரம் காத்திருக்கிறீர்களே  அவ்வள்விற்கு பெரிதாக மாறிக்கொண்டிருக்கும்.

* Weenie Google  இதைக்கிளிக் செய்யுங்கள்  எவ்வளவு நேரம் காத்திருக்கிறீர்களே  அவ்வள்விற்கு   சிறிதாக மாறிக்கொண்டிருக்கும்.

Google Guitar - கூகிள் கிட்டார் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்திடுங்கள்..

1 comment: